2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடலில் மூழ்கி வயோதிபர் பலி

George   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா, நா.நவரத்தினராசா

யாழ். காரைநகர் கசூரினா கடலினுள் மூழ்கி மட்டக்களப்பு - கொழும்பு வீதியைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் (வயது 66) என்ற வயோதிபர் இன்று திங்கட்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மேற்படி வயோதிபர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறிய நிலையில், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வயோதிபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .