2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

போலி பொதுச் சுகாதார பரிசோதகர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பல்லசுட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (12) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர், தன்னைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனக்கூறி மேற்படி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வாகையடியிலுள்ள கடையொன்றுக்கு கடந்த திங்கட்கிழமை (11) சென்றுள்ள சந்தேகநபர், கடையில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் கடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யாமல் இருக்க வேண்டுமாயின் தனக்கு 5 ஆயிரம் ரூபா பணம் தரும்படி கேட்டுள்ளார். உடனே இவர் தொடர்பில் உஷக்ரடைந்த கடை உரிமையாளர், தற்போது பணம் இல்லையெனவும் செவ்வாய்க்கிழமை வரும்படியும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடை உரிமையாளர் உடுவில் பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றிற்கு இவர் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மேற்படி போலி நபர் பணம் வாங்க கடைக்கு வந்தவேளை, அங்கு மறைந்திருந்த சுகாதார வைத்தியதிகாரி மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து மேற்படி நபரைப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Wednesday, 13 August 2014 10:02 AM

    அப்படியானால் அங்கு உண்மையான சுகாதார பரிசோதகர்கள் அந்த போலி சுகாதார பரிசோதகர்போல் நடந்துவந்துள்ளனர்போல் தெரிகிறது... வடிவேல் திரைப்பட கொமெடி போல் உள்ளது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .