2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவி வழங்கல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டம் ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா நிதியுதவி புதன்கிழமை (13) வழங்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்ட இந்த நிதியை, சத்தியநாதன் வித்தியா பெண்  பெற்றுக்கொண்டார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தால், சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 80 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் சுயதொழில் முயற்சி உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .