2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கத்திமுனையில் கொள்ளை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கிளிநொச்சி திருமுறிகண்டிப் பகுதியிலுள்ள வீட்டுடன் இணைந்துள்ள கடையில் செவ்வாய்க்கிழமை (12) இரவு அத்துமீறி நுழைந்த இனம்தெரியாதோர், வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி வீட்டிலிருந்த நகைகள் மற்றும் கடையிலிருந்த பொருட்கள் என்பவை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் புதன்கிழமை (13) தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலும் குறிப்பிடுகையில்,

நள்ளிரவு கடையினுள் நுழைந்து, கடைக்குள் படுத்திருந்தவரை கத்திமுனையில் எழுப்பி, வீட்டில் படுத்திருந்த பெண்மணியினையும் எழுப்பி வீட்டிலுள்ள நகைகளை எடுத்துத் தரும்படி மிரட்டியுள்ளனர்.

இதன் காரணமாக வீட்டிலிருந்தவர்கள் 4 ½ பவுண் நகைகளை எடுத்துக் கொடுத்துள்ளனர். தொடர்ந்து கடையினுள் இருந்த தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர்; புதன்கிழமை (13) அதிகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும், அதற்கிணங்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X