2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் வெங்காய உற்பத்தி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, போ.சோபிகா

யாழ்.மாவட்டத்தில் இவ்வாண்டிற்குள் (2014) 51 ஆயிரத்து 76 மெற்றிக்தொன் சின்ன வெங்காய உற்பத்தி செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண சின்ன வெங்காயத்திற்கு உள்ளுர் மற்றும் வெளிமாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கேள்வி அதிகரிப்பினை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த உற்பத்தி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில், அதிகளவாக 2012ஆம் ஆண்டு, 3,816 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 57 ஆயிரத்து 225 மெற்றிக்தொன் வெங்காய உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

இந்த உற்பத்தியானது, 2013ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது. 2013ஆம் ஆண்டு 3,813 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும், பருவம் தப்பிய மழை மற்றும் போதிய நீர் இன்மையால் வெங்காயச் செய்கைகள் அழிவடைந்தன.

இதனால், 2013ஆம் ஆண்டு 27 ஆயிரத்து 92 மெற்றிக்தொன் வெங்காய உற்பத்தியே செய்ய முடிந்தது. இதனால் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து சந்தையில் வெங்காயம் 200 ரூபா விலைக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெங்காயத்தின் அதிகரித்த கேள்வியை ஈடுசெய்யும் முகமாக வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X