2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இயங்க மறுத்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வைத்தியர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வைத்தியர் ஒருவர், இயங்க மறுத்த தனது மோட்டார் சைக்கிளை வீதியில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் வியாழக்கிழமை (14) மல்லாகம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் மேற்படி வைத்தியர், மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிள் இடைநடுவில் இயங்காமல் நின்றுவிட்டது.

மேலும் மேலும் அதனை இயக்க முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.  இதனால், ஆத்திரங்கொண்ட வைத்தியர், வீதிக்கருகில் எரிந்துகொண்டிருந்த குப்பைக்குள் தனது மோட்டார் சைக்கிளினைப் போட்டு எரித்துள்ளார்.

இதனைப் பார்த்துக்கொண்டு நின்ற அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முற்பட்ட போதும், அது கைகூடவில்லை.

ஏன் மோட்டார் சைக்கிளை எரித்தீர்கள் என மக்கள் வைத்தியரிடம் கேட்ட போது, 'இந்த மோட்டார் சைக்கிள் ஓட வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்களும் ஏசுகின்றனர், இதுவும் ஓட மறுக்கின்றது. ஆகையால் எரித்தேன்' என்று பதிலளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .