2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உள்ளாடையுடன் சென்று பெண்ணைக் கட்டிப்பிடித்தவருக்கு பிணை

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். கரவெட்டி வதிரி ஆண்டாள் வளவுப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப் பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், மேற்படி பெண்ணின் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது மேற்படி சந்தேகநபர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.

பெண் கூக்குரலிடவே, மேற்படி சந்தேகநபர் தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, மேற்படி பெண் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (14) மாலை முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் அதேயிடத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி நபரக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நெல்லியடிப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.  இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .