2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிலத்தடி நீர் கலப்படம் தொடர்பில் ஆராய்வு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுன்னாகம் பகுதியில் மின்உற்பத்தி நிலையங்களால் அப்புறப்படுத்தப்படுகின்ற கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இன்றுகாலை முதற்கட்ட விசேட கலந்துரையாடலொன்று உடுவில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், உடுவில் பிரதேச செயலர் நந்தகோபாலன் குடிநீர் வாரியம், நீர் வழங்கள் சபை, மின்சார சபை, இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களம், விவசாயத் திணைக்களம், கிராம சேவையாளர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி, மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த 12.08.2014 அன்று யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற யாழ்.மாவட்டத்தில் நிலவும் வரட்சி தொடர்பிலான ஆய்வரங்கின் போது மேற்படி விடயம் தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இவ்விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்இரண்டாம் கட்ட நடவடிக்கையாக மின்உற்பத்தி நிலையங்களின் சுற்றாடலை ஆராயும் செயற்பாடுகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .