2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழில் குழு மோதல் : ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (16) மாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்தனர்.

மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் - கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .