2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழில் 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' கண்காட்சி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


நல்லூர் திருவிழாவையொட்டி வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஒழுங்கு செய்த சூழலியல் விவசாயத்தை நோக்கி என்ற தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்;சி ஒன்று சனிக்கிழமை (16) முதல் ஆரம்பமாகியது.

நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலையின் விளையாட்டுத் திடலில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திறந்து வைத்தார்.

சேதனைப் பசளைகள், மண் இதமாக்கிகள், யாழ். மாவட்டத்தின் நீர்வளங்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகள், விவசாயச்சூழலில் நீர் மாசடைவதைத் தடுக்கும் வழிகள், உயிரியல் முறையில்; பீடைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், தாவரப் பீடைநாசினிகளின் தயாரிப்பு, அருகிவரும் பாரம்பரிய நெல்இனங்கள், இலை மரக்கறி வகைகளின் முக்கியத்துவம், காளான் வளர்ப்பு போன்ற சூழலுக்கு நட்பான விவசாயச் செயன்முறைகளை உள்ளடக்கியதாக பொதுமக்களும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ்கோ நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருட்கள், பழமுதிர் சோலை நிறுவனத்தின் பழ உற்பத்திப் பொருட்கள், நல்லின தென்னை, மா, பலா, பப்பாசி போன்ற தாவரங்களின் விற்பனை மையங்களும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் மாலை 3 மணி தொடக்கம் இரவு 9மணிவரை நடைபெற இருக்கும் இக்கண்காட்சி சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகிய விசேட திருவிழாக்களின்போது காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .