2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

எரிபொருள் மானியத்திற்குப் பதிலாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை (20) மேற்கொள்ளப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

இதன்போது, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறையில் கீழுள்ள பகுதிகளிலுள்ள 464 மீனவர்களுக்கு தலா 1 இலட்சத்து 12500 ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. எனினும் அதில் மாற்றம் கொண்டு வந்த கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தற்போது மீன்பிடி உபகரணங்களை வழங்கி வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .