2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்ணைத் தாக்கியவர் விளக்கமறியலில்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். கரவெட்டியைச் சேர்ந்த பெண்ணொருவரைத் தாக்கி, அவரைப் படுகாயமடையச் செய்த சந்தேகநபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர், கரவெட்டியைச் சேர்ந்த செல்வராசா செல்லம்மா (வயது 63) என்பவரை தலையில் கம்பியால் திங்கட்கிழமை (18) தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மேற்படி பெண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார், தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேகநபரை திங்கட்கிழமை (18) மதியம் கைதுசெய்தனர்.

தொடர்ந்து, சந்தேகநபர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (18) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .