2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூன்று கிராமங்களுக்கு மின்விநியோகம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சேர்ந்த மூன்று கிராமங்களுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் திங்கட்கிழமை (18), இந்த மின் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

20 மில்லியன் ரூபாய் செலவில் போக்கறுப்புக் கேவில் கிராமத்திற்கும், 8 மில்லியன் ரூபாய் செலவில் செம்பியன்பற்று தெற்கு மானியவளை கிராமத்திற்கும், 14 மில்லியன் ரூபாய் செலவில் நாகர்கோவில் கிராமத்திற்கும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், குடாரப்பு கிராமத்திற்கு வெகுவிரைவில் மின் விநியோக நடவடிக்கையை ஏற்படுத்தித் தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .