2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரின் தற்காலிக கொட்டகைகளால் மக்கள் அச்சம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற இராணுவத்தினர் முன்னெடுக்கும் நடவடிக்கையை வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு வன்மையாக கண்டிக்கின்றது.  வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களே, இன்னும் சொந்தக் காணிகளில் குடியேற்றப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் நிலையில், வலி வடக்கு மக்களை எவ்வாறு வளலாய்ப் பகுதியில் குடியேற்ற முடியும். உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காகவே, இராணுவம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .