2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புலமை பரிசில் தொகையை அதிகரிக்க கோரி மனு தாக்கல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மகாபொல மற்றும் பேசரி புலமைப் பரிசில்களை ரூபாய் 2500 இல் இருந்து ரூபாய் 5000 வரை உயர்த்துமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால், மட்டக்களப்பு மருத்துவ பீட வளாகத்தினுள் இன்று செவ்வாய்க்கிழமை (18) கையொப்பமிடும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

வாழ்க்கைச் செலவு மற்றும் கல்விச் செலவுகளின் அதிகரிப்பிற்கு ஏற்ப  புலமைப்பரிசில் தொகையும் அதிகரிக்கவேண்டுமெனவும், இக் கொடுப்பனவு உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது. 

புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக பெற்றோரின் வருமான தொகையை அதிகரித்தல் மற்றும் பரிசிலுக்கு தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் முதலிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாணவர்கள், அனைத்து பல்கலைக் கழக மாணவர் பேரவையின் இணைப்பாளர் நாஜித் ஹிந்திக்கவிடம் கையளித்தாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .