2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் இருவர், செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்ததுடன் அவர்களில் ஒருவர் கோமா நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய  பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர்.

கந்தசாமி கேதாரன் (வயது 26), நலின் பிரதீபன் (வயது 27) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் நலின் பிரதீபன் என்பவர் கோமா நிலையில் உள்ளார்.

கொழும்புத்துறைப் பகுதிக்கு விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்காக ஓடியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .