2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தாய்ப் பாலூட்டுவதை ஊக்குவித்தல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


சர்வதேச தாய்ப் பாலூட்டும் வாரத்தை (ஆகஸ்ட் 1 – 7) அனுஷ்டிக்கும் முகமாக சர்வோதயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தாய்ப் பாலூட்டுதன் அவசியம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கரைச்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வூட்டும் செயலமர்வில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகஸ்தர்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

இதன்போது, வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வகையான நேரங்களில் எப்படியான முறைகளில் தாய்ப்பாலூட்ட முடியும் என்பது தொடர்பாகவும், தாய்ப்பாலின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

அத்துடன், வேலைக்குச் சென்றாலும், ஒழுங்குமுறையில் தாய்ப்பாலூட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலைக்குச் செல்லும் ஆண்கள், வீட்டிலுள்ள தங்கள் மனைவியருக்கு தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பில் ஊக்கம் கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது கூறப்பட்டது.

பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும், கிராமஅலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .