2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளிகளுக்குப் பெயர்ப்பதாதைகள்

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


அனலை சமூக நல மன்றத்தின் அனுசரணையுடன் ஸ்ரீவேணி கல்வித்திண்ணையின் உதவியுடன் அனலைதீவிலுள்ள நான்கு முன்பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய பெயர்ப்பதாதைகள் செவ்வாய்க்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டன.

அனலைதீவு 5 ஆம் வட்டாரத்திலுள்ள அருணோதயா முன்பள்ளி, 1ஆம் வட்டாரத்திலுள்ள பாலமுருகன் முன்பள்ளி, 4ஆம் வட்டாரத்திலுள்ள ஐயனார் முன்பள்ளி, 1 ஆம் வட்டாரத்திலுள்ள நாவலர் முன்பள்ளி ஆகியவற்றிற்கே பெயர்ப் பதாதைகள் வழங்கப்பட்டன.

இந்தப் பெயர்ப் பதாதைகளை, அனலைதீவு கிராமசேவகர் தி.தர்சன் மற்றும் அனலைதீவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுதாகரன் ஆகியோர் முன்பள்ளிப் பொறுப்பாசிரியர்களிடம் கையளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .