2025 ஜூலை 09, புதன்கிழமை

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய கழிவுகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தில்; கலக்கப்பட்டிருந்தமை தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் தொடர்பில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானஞ் செலுத்தி அதனையும் அவ் அறிக்கையுடன் இணைக்குமாறும் பணித்துள்ளார்.

இக்குழுவில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மத்திய சூழல் அதிகார சபை உட்பட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிபுணர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று புதன்கிழமை (20), அமைச்சர் அவர்களுடன் உடுவில் பிரதேச செயலர் ஏனைய துறைசார் அதிகாரிகள், கிராம சேவையாளர், பேராசிரியர்கள் மண்வள  நீர் வள ஆய்வாளர்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .