2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் நிராகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது.

இதன்போது, சிவாஜிலிங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் காலத்தை நீடித்தல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் போன்ற பிரேரணைகள் கொண்டு வரப்படவிருந்தன.

இந்தப் பிரேரணைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பிரேரணைகள் என்பதால் இவற்றை ஏற்க முடியாது எனவும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஏற்க முடியாது எனவும் கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரேரணைகள் எவ்விதத்தில் அதற்கு உதவியாகவிருக்கும் என்பது தெரியவில்லையென முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதனை, அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டு மூன்று பிரேரணைகளையும் நிராகரித்தார். அத்துடன், அதில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து அடுத்து அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவைத் தலைவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அவை அமர்வில் கலந்துகொண்டனர். இருப்பினும், அங்கஜன் இராமநாதன் மட்டும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் வீடு சென்றுவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .