2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரயில்பாதை நிர்மாணம் குறித்து ஆலோசனை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாவட்டத்தில் ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலையில், பிரதான பாதைகளை ஊடுருவும் ரயில்பாதைகளின் அமைப்பு முறைமை தொடர்பாகவும் உள்ளக வீதிகள் குறுக்கிடும் ரயில்பாதையில் தடுப்புகள் மற்றும் மின்சமிக்ஞைகள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதான வீதிகளை ஊடுருவிச் செல்லும் ரயில்பாதைகளின் அமைப்பு முறைமை காரணமாக பாதசாரிகளும் வாகனங்களின் போக்குவரத்தும் பெரிதும் பாதிப்புகளுக்கு உட்படுவதாக இதன்போது அமைச்சர் விளக்கப்படுத்தினார்.

எனவே இம்முறைமையை இலகுபடுத்துமாறும், உள்ளக வீதிகள் குறுக்கிடுகின்ற ரயில்பாதைகளில் வீதித்தடைகள் மற்றும் சமிக்ஞை விளக்குகளை அமைக்குமாறும் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவ்வதிகாரிகளுக்கு இன்று ஆலோசனை வழங்கியதுடன் இவ்வாறான இடங்களை தான் நேரில் பார்த்து மேலும் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, கொக்குவில் உடையார் மற்றும் பிறவுன்வீதி ரயில் பாதை கடவைகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.

இச்சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, ரயில்பாதை நிர்மாணிப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் பத்மசிறி, இர்கோன் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் கங்காதரன், பொறியியலாளர் கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .