2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்து சிகிச்சைப் பிரிவிற்கு புதிய கட்டிடம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்.போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவில் 5 மாடிக் கட்டிடம் அமைக்கும் பணிகள் 2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவியில் இலங்கையிலுள்ள 16 வைத்தியசாலைகளில் கட்டிடங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி திட்டத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியுள்ள நிலையில், சுகாதார அமைச்சின் மேலதிக நிதியைக் கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டும் 5 மாடிக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 5 மாடிக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .