2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எனது சொந்த நிலமான வலி.வடக்கைப் பார்க்க ஆசைப்படுகின்றேன்: அங்கஜன்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனது சொந்த நிலமான வலி வடக்கிற்கு செல்ல ஆசைப்படுகின்றேன்' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வியாழக்கிழமை (21) தெரிவித்தர்.

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வியாழக்கிழமை (21) மாலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அங்கஜன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'உங்கள் பிரச்சினையை நீங்கள் நினைத்தால் மட்டுமே தீர்க்க முடியும். உங்கள் பிரச்சினையை நீங்கள் கூறினீர்கள். பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கவே நான் இங்கு நேரில் வந்துள்ளேன்.

உங்களை போலவே நானும் எனது சொந்த நிலமான வலி வடக்கிற்கு செல்ல ஆசைப்படுகின்றேன். அதற்கான நடவடிக்கையாக, யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியுடன் பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். தற்போதும் கலந்துரையாடியும் வருகின்றேன்.

வெகுவிரைவில் நாம் அப்பகுதிக்கு செல்வோம். எமது சொந்த நிலங்களில் கால் எடுத்து வைப்போம். உங்கள் கனவுகள் நிறைவேற நான் வழி செய்வேன். உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொண்டுள்ளேன்.

ஏனெனில் அப்பிரச்சினை எனக்கும் உண்டு. நீங்கள் உங்கள் சொந்த இடத்தில் மீளவும் குடியமர ஆர்வம் கொண்டுள்ளீர்கள். அதனை நான் முடிந்தவரை முயற்சி செய்து முடிப்பேன். அதன் மூலம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நம்புகிறேன்' என அங்கஜன் மேலும் தெரிவித்தார்.

வலி. வடக்கு மக்கள் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி முகாம்களில் வாழ்வாதாரத் தொழில்கள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் காணிகள் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .