2025 ஜூலை 09, புதன்கிழமை

செல்வச்சந்நிதி முருகன் உற்சவத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

ஆலய மகோற்சவ காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பிலான கூட்டம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் தொண்டைமானாறு பொது நோக்கு மண்டபத்தில் வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றது.

இதன்போது, ஆலய புனிதத் தன்மை மற்றும் அடியார்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், உணவு மற்றும் வியாபார நிலையங்கள், தொண்டர் சேவை உள்ளிட்ட பொது விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடலில் பின்வரும் நடவடிக்கைகளை ஆலயத் திருவிழாக் காலங்களில் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டன.

பருத்தித்துறை வைத்தியதிகாரிகள் பணிமனையினரின் ஒத்துழைப்புடன், வல்வெட்டித்துறை நகரசபை சுகாதாரம், குடிநீர், மலசலகூடம் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

டெங்கு பரவாமல் தடுக்கும் முகமாக ஆலய சூழலில் புகையூட்டும் நடவடிக்கையில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை மேற்கொள்ளல்.

மருத்துவச் சான்றிதழ்கள் பெற்ற உணவகங்கள் மட்டுமே ஆலயச் சூழலில் இயங்க முடியும் என்பதுடன், ஆலயத் திருவிழாக் காலங்களில் பச்சை குத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவர்களுக்குத் தடையும் விதித்தல்.

மேலும், ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் உடமைகளைப் பாதுகாப்பதற்கும், மற்றும் அங்க சேஷ;டைகளைக் கண்டறிவதற்கும் ஆலய வீதிகளில் இரகசி கமராக்கள் பொருத்துதல், இதற்கு மேலாக பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில், இவ்வருட மகோற்சவ பொறுப்பாளர் வி.தெய்வேந்திரர் ஜயர், வலி.கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் கணபதிப்பிள்ளை துரைராசா, சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினர், மதுவரித் திணைக்களத்தினர், பொலிஸார், தனியார் சிற்றூர்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .