2025 ஜூலை 09, புதன்கிழமை

நீர்வெறுப்பு நோய்க்கான சிகிச்சை நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ். போதனா வைத்தியசாலையில் நீர்வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று வியாழக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிகிச்சை நிலையம் தொடர்பாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

வரலாற்றில் முதல்முறையாக போதனா வைத்தியசாலையில் விலங்கு விசர் நோய் தொடர்பான அலகு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பாக சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள், 24ஆம் விடுதிக்குச் சென்று அதிகநேரம் செலவழித்துச் சிகிச்சைப் பெறவேண்டி இருந்தது.

எனவே நோயாளர்களது நன்மை கருதி வெளிநோயாளர் பிரிவிலேயே சிகிச்சை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

நாய்களை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு விசர் நாய் கடிக்கு உள்ளாகியவர்கள் 100 வீதம் மரணத்தை தழுவியே ஆகவேண்டும். எனவே மரணத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

அதனடிப்படையில் இந்த அலகைத் திறந்து வைத்துள்ளோம். எனினும் நாய்க் கடிக்குள்ளாகி நாள் ஒன்றுக்கு 40 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

அதற்கமைய தனியான மருத்துவர் மற்றும் தாதிகளையும் நியமித்து புதிய அலகை உருவாக்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சிகிச்சை நிலையம் ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்த கட்டிடத் தொகுதியிலேயே உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .