2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன், பொ.சோபிகா
 
இளவாலை சித்திரமேளிச் சந்தியில் மின்சார வேலையில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் மூவர் மீது இன்று வெள்ளிக்கிழமை (22) இரவு மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மட்டுவில் வளர்மதி சனசமுக நிலையத்தடியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கசிநாத் (வயது 26) என்பவரே உயிரிழந்ததுடன், அதேயிடத்தைச் சேர்ந்த கந்தசாமி சசிகுமார் (வயது 26), இராசஜெயம் விஜயமோகன் (வயது 27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
 
இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .