2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திக்கம் வடிசாலை உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


திக்கம் வடிசாலை புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் உற்பத்திகளை ஏனைய மாகாணங்களில் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(23)  நடைபெற்றது.

அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திக்கம் உற்பத்திகளை வடமத்தி, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சந்தைப்படுத்துவது தொடர்பிலும் அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்றைய இக்கலந்துரையாடலில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம், பொதுமுகாமையாளர் திரு.லோகநாதன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திரு.அருந்தவநாதன் மற்றும் தென்பகுதி விற்பனை முகவர்கள், திக்கம் வடிசாலை சங்கத் தலைவர் உபதலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .