2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கந்தையா சுவாமிகளின் திருவுருவச்சிலை திறப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


ஈழத்து சித்தர்கள் வரிசையில் அவதரித்த கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த தவத்திரு கந்தையா சுவாமிகளின்; (குடைச்சாமி) திருவுருவச்சிலை  கோண்டாவில் குமரகோட்டம் ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் சனிக்கிழமை (23 திறந்து வைக்கப்பட்டது.

திருவுருவச் சிலையை நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன், நல்லூர் பிரதேச சபைத்தலைவர் ப.வசந்தகுமார், ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ வசந்தராஜசர்மா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .