2025 ஜூலை 09, புதன்கிழமை

குழுமோதலில் கைதானவருக்கு விளக்கமறியல்

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். துன்னாலை தங்குச்சம்பட்டிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் குமாரசாமி பொன்னம்பலம் சனிக்கிழமை (23) உத்தரவிட்டார்.

மேற்படி கைகலப்பு சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.நாகேந்திரன் (வயது 45) என்பவர் காது அறுபட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை வெள்ளிக்கிழமை (22) இரவு கைது செய்தனர்.

தொடர்ந்து, மேற்படி சந்தேகநபரை, பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (23) மாலை ஆஜர்ப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

மாடு ஒன்று காணாமல் போனமை தொடர்பிலேயே இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .