2025 ஜூலை 09, புதன்கிழமை

சாவகச்சேரி வைத்தியசாலையில் பார்வையாளர் மண்டபம் திறந்துவைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆர்.கேதீஸ்வரனால் சனிக்கிழமை (23) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வில், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் யோ.ஜெயக்குமார், வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி ரி.ஸ்ரீகரன், வைத்தியக் கலாநிதி ச.அம்பிகைபாகன், சாவகச்சேரி நகரசபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு நேரக்கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆகையால், தூர இடங்களில் இருந்து நோயாளர்களைப் பார்வையிட வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பார்வையிடவேண்டியிருப்பதுடன், வெயில், மழையால் பார்வையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் முகமாக இந்தப் பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டதாக சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த அமரர்களான வ.பொன்னுச்சாமி, திருமதி வ.பொன்னுச்சாமி, திருமதி இ.உருத்திரன் ஆகியோர் ஞாபகார்த்தமாக அவர்களது குடும்பத்தாரால் இந்தப் பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .