2025 ஜூலை 09, புதன்கிழமை

மலசலகூடங்கள் அமைக்க நிதியுதவி

George   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச செயலக பிரிவில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் 100 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் திங்கட்கிழமை (25) தெரிவித்தார்.

ஒரு மலசலகூடம் அமைப்பதற்கு 1 இலட்சம் ரூபாய் தேவையென்ற நிலையில், அதில் 55 ஆயிரம் ரூபாவை யு.என்.எச்.சி.ஆர் நிறுவனம் கட்டம் கட்டமாக வழங்குகின்றது.

அதன்படி, முதற்கட்ட நிதி இம்மாத ஆரம்பக் காலப்பகுதியில் வழக்கப்பட்டு மலசலகூடங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 200 மலசலகூடங்கள் அமைப்பதற்கு யு.என்.எச்.சி.ஆர் நிறுவனம், முன்வந்துள்ளதுடன் அதற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்று வருவதாக பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .