2025 ஜூலை 09, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டு

George   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். நாவலர் வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் திங்கட்கிழமை (25) தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்த நேரத்திலேயே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர், ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு பதிவு செய்ததாகவும், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .