2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., சாட்டிக் கடற்கரையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட கொழும்பைச் சேர்ந்த அறுவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த இவர்கள், மதுபானம் அருந்திவிட்டு கடற்கரையில் நின்று தங்களுக்குள் சண்டையிட்டுள்ளனர்.

அங்கு சென்ற ஊர்காவற்றுறைப் பொலிஸார், அவர்களின் வாகனத்தைச் சோதனை செய்த போது, வாகனத்திற்குள் கஞ்சா இருந்தமை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, 24, 37 மற்றும் 27, 28 வயதுடைய தலா இருவர் என அறுவரைக் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன். அவர்களிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, மேற்படி நபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (25) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .