2025 ஜூலை 09, புதன்கிழமை

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

துன்னாலைப் பகுதியில் வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெல்லியடிப் பொலிஸார் திங்கட்கிழமை (25) அதிகாலை மேற்படி நபரைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்படும் போது, அந்நபரிடமிருந்து குறடு, சுத்தியல் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந்நபர், பருத்தித்துறை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (25) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

குறித்த நபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .