2025 ஜூலை 09, புதன்கிழமை

இளைஞனின் தொலைபேசியை அபகரித்த நபர்கள்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ்.திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனின் தொலைபேசியை வீதியில் நின்றிருந்த மூன்று மூவர்; திங்கட்கிழமை (25) இரவு அபகரித்து சென்றுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

திக்கம் வீதியால் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மேற்படி இளைஞனை, வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த மூவர் வழிமறித்துள்ளனர்.

தங்கள் தொலைபேசிகளில் மீதி முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்து, இளைஞரின் தொலைபேசியில் இருந்து 5 ரூபாவை கடன் தருமாறும் கேட்டுள்ளனர்.

கடன் வழங்குவதற்காக இளைஞன் தொலைபேசியை எடுத்தபோது, மேற்படி மூவரும் இளைஞரது தொலைபேசியைப் பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

இதனையடுத்து, இளைஞன் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .