2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி நீதிமன்றில் ஒப்படைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தி, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(26) ஒப்படைக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாகப் பொலிஸார் மேலும் கூறுகையில்,

மேற்படி பகுதியில் சில நபர்கள் அனுமதியின்றி பாரவூர்தியில் மணல் அள்ளும் நடவடிக்கையில் திங்கட்கிழமை (25) மாலை ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கு விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளை, மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தியை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து, பாரவூர்தியை கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர், அதனை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேற்படி பாரவூர்தி தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) காலை வரையில் எவரும் உரிமை கோராதமையால் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .