2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மனைப்பொருளியல், அழகுக்கலை பயிற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் புதன்கிழமை (27) தெரிவித்தார்.

3 மாத காலத்தைக்கொண்ட இந்தப் பயிற்சி நெறியில் 9 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்றவர்கள் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

பயிற்சி நெறி இணுவில் மகளிர் அபிவிருத்தி நிலைய கட்டிடத்தில் இடம்பெறும் என்பதுடன், இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொள்பவர்களுக்கு தினமும் 100 ரூபாய் கொடுப்பணவு வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், உடுவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .