2025 ஜூலை 09, புதன்கிழமை

பொலிஸ் நிலையத்தில் திருட முற்பட்ட நால்வர் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மேலதிக சில்லைக் கழற்ற முற்பட்ட நால்வரை புதன்கிழமை (27) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் கூறுகையில்,

விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியொன்று அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி முச்சக்கரவண்டி உரிமையாளர் மற்றும் மேலும் மூவர் இணைந்து, அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்துக்கு புதன்கிழமை (27) காலை சென்று தங்கள் முச்சக்கரவண்டியைப் பார்வையிட வேண்டும் வேண்டும் என்று கோரியுள்ளனர்.

போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கப்பெற் அனுமதியைத் தொடர்ந்து முச்சக்கரவண்டியை பார்வையிட்டோர் அதன் பின்புறமாக பொருத்தப்பட்டிருந்த மேலதிக சில்லைக் கழற்ற முற்பட்டுள்ளனர்.

இதனை அவதானித்த, பொலிஸ் நிலையத்துக்குள் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், உடனடியாக நால்வரையும் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நால்வரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .