2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராணுவத்தினரால் நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


இராணுவத்தினரால் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகள் செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவின் வழிகாட்டலில் இந்த நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டன.

இந்த நீர்த்தாங்கிகள், மாவடி, செம்பியன்பற்று, மாமுனை, குடாரப்பு, மருதங்கேணி, குடத்தனை, நாகர்கோவில், தாளையடி உள்ளிட்ட கிராமங்களைக் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இந்தத் தண்ணீர்த் தாங்கிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயசுந்தர, 55 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நீர்த்தாங்கிகளை வழங்கி வைத்தார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .