2025 ஜூலை 09, புதன்கிழமை

திராட்சைப் பழ உற்பத்தியில் பாதிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் (2014) நிலவிய அதிகவெப்பம் மற்றும் பனிப்பூச்சியின் தாக்கத்தால், திராட்சைப்பழ உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

கடந்த வருடங்களைவிட (100 ஏக்கர்) இவ்வருடம் அதிக நிலப்பரப்பில் (120 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில்) திராட்சைப் கொடிகள் செய்கை பண்ணப்பட்டது.

இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அதிக வெப்பத்தால் கொடிகள் அதிகம் பூக்கவில்லையென்பதோடு, பனிப்பூச்சிகளின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டதால் இம்முறை விளைச்சல் குறைவாகவேயுள்ளது.

வழமையாக திராட்சைச் செய்கையில், ஒருகொடியில் இருந்து 20 கிலோகிராம் விளைச்சலைப் பெறமுடியும். ஆனால் இம்முறை ஒரு கொடியில் இருந்து 12 கிலோகிராம் விளைச்சலையே பெறமுடிகின்றது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2013) 26 ஆயிரத்து 190 மொற்றிக்தொன் திராட்சை பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .