2025 ஜூலை 09, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயம் கபிலன்

யாழ். வதிரி முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற 26 வயதுடைய சந்தேகநபரை சனிக்கிழமை (30) கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர், ஆலய முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றைத் திருடி அதனை செலுத்திக்கொண்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனை அவதானித்த அங்கு நின்ற இளைஞர்கள் சிலர், மேற்படி நபரைத் துரத்திச் சென்று முள்ளிப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு இது தொடர்பில் இளைஞர்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அவ்விடத்துக்குச் சென்று மேற்படி நபரைக் கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .