2025 ஜூலை 09, புதன்கிழமை

கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படி இராணுவத்தினர் கோரிக்கை

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், யோ.வித்தியா

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரத்தைத் தரும்படி இராணுவத்தினர் கோரிய போதும் தான் அதனை மறுத்து விட்டதாக, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன.

இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவுகள் போடமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அரியாலைப் பகுதியில் பிரதேச சபைக்கு அன்பளிப்பாகக் கிடைத்த 2 ஏக்கர் காணியை கழிவுகள் கொட்டுவதற்கும், தொடர்ந்து அவற்றை பசளையாக்கும் திட்டமும் 2 மில்லியன் ரூபா செலவில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆயினும், அப்பிரதேசம் நன்னீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் வரும் பிரதேசமென்றும், மேலும் அந்தப் பகுதியைச் சூழ விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றமையால் அங்கு கழிவுகளைப் போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களமும், வடமாகாண விவசாய அமைச்சும் மறுத்திருந்தது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளைப் கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த 27ஆம் திகதி முதல் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை தவிசாளர் நிறுத்தியிருந்தார். 

இந்நிலையில், சனிக்கிழமை (30) பிரதேச சபைக்குச் சென்ற இராணுவத்தினர் கழிவுகளைக் கொட்டுவதற்குரிய இடங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும், ஆகையால் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை தரும்படியும் தவிசாளரிடம் கேட்ட போது அதற்குத் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .