2025 ஜூலை 09, புதன்கிழமை

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

George   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர் பகுதியில் மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேரை ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர்.

மேற்படி நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (01) ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த, பிரபல எழுத்தாளர் சிவகருணாகரன் மற்றும் அவரது இளைய மகன் இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மூத்த மகன் சிவகருணாகரன் ஹேமந்த் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி நகர்ப்பகுதியிலுள்ள கடையொன்றில் வைத்து சிவகருணாகரனின் இளைய மகன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, இதனைத் கேட்கச் சென்ற சிவகருணாகரன், மற்றும் அவரது மூத்த புதல்வர் மீதும் மேற்படி நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்தே, மேற்படி 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .