2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வாழ்வாதார நிவாரண கடன்திட்டம் அறிமுகம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான வாழ்வாதார நிவாரண கடன் திட்டத்தின் (சஹண அருண கடன் திட்டம்) அங்குரார்ப்பணம் யாழ் நகர் மேற்கு வாழ்வின் எழுச்சி சமூக மைய வங்கியில் திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.

இந்தத் திட்டத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

இத்திட்டம் நாடு பூராகவுமுள்ள 1,074 வாழ்வின் எழுச்சி சமுதாய மட்ட வங்கிகள் (சமுர்த்தி வங்கிகள்) மூலம் மக்கள் மத்தியில் செயற்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தில், ஒரு நாளில் 5,000 ரூபாய் கடனும், 3 நாட்களில் 50 ஆயிரம் ரூபாய் கடனும் பெறமுடியும்.

இந்த கடனைப் பெறுவதற்கு பிணையாளிகள் தேவையற்றது என்பதுடன், முழுமையாக மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்தத் திட்டத்தில் கடன்களைப் பெற்றவர்கள், முதல் வருடத்தில் எவ்வித மீளளிப்புப் தவணைப் பணமும் செலுத்தத் தேவையில்லை.

தொடர்ந்து இரண்டாவது வருடத்தில் இருந்து 4 வீத வட்டியின் அடிப்படையில் தவணைகளாக கடனை மீளச்செலுத்த  வேண்டும்.

யாழ் மாவட்டத்திலுள்ள 33 வாழ்வின் எழுச்சி சமுதாய மட்ட வங்கிகள் (சமுர்த்தி வங்கிகள்) இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.

அந்தவகையில் இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் 5,000 ரூபாய் கடனை 28 பயனாளிகளும், 50 ஆயிரம் ரூபாய் கடனை 14 பயனாளிகளும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், யாழ்.மாவட்டத்திலுள்ள 33 சமுதாய மட்ட வங்கிகள் மூலம் 700 பயனாளிகள் இக்கடன்களைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .