2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நோயாளியை பார்வையிடச் சென்றவர் மரணம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

ஊரெழுவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பிரபாகரன் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பனின் தந்தை நிலையறிந்து, வவுனியாவிலுள்ள நண்பருக்கு சொல்வதற்காக வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை (04) இரவு சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்றவர், வைத்தியசாலை வளாகத்தில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். உடனடியாக மேற்படி நபரை வைத்தியர்கள் சோதனை செய்த போது, அவர் மரணமடைந்திருந்தார்.

சடலம் மரண விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .