2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் சல்லி கற்களுக்குள் மறைத்து டிப்பர் ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை வெள்ளிக்கிழமை (05) கைப்பற்றியதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராஜன் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது வாகன சாரதி வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

20 முதிரை மரக்குற்றிகள் இதன்போது கைப்பற்றியதாகவும், ஒவ்வொரு குற்றியும் 6 அடி நீளமும் 1 அடி விட்டமும் கொண்டதாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் ரக வாகனத்தினுள் சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகவும் அதனை கொண்டு சாரதியை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .