2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

George   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, ற.றஜீவன்


யாழ். பொது நூலகத்தின் தேவைக்காக 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும், ஒரு தொகுதி நூல்களும் ஏழாலை தெற்கை சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் சிவலிங்கம் சிவகாந்தன் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி பொருட்களை, யாழ். பொதுநூலக பிரதம நூலகரிடம் யாழ்.பொது நூலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (05) கையளித்தார்.

பொருட்களை கையளித்துவிட்டு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறு அழிவுகளைச் சந்தித்து மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வடமாகாண சபை தன்னாலான உதவிகளை செய்து வருகின்றது.

எமது சபைக்கு பல்வேறுபட்ட தடங்கல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலும், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எம்மக்களுக்கு செய்யும் உதவிகள் வரவேற்கத்தக்கவையென அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .