2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கஞ்சா கொண்டு சென்ற முச்சக்கரவண்டி ஒட்டுநர் கைது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.இளவாலை பனிப்புலம் பகுதியில் கஞ்சா கொண்டு சென்ற 33 வயதுடைய முச்சக்கரவண்டி ஒட்டுநரை சனிக்கிழமை (06) கைதுசெய்ததாக இளவாலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவையும் மீட்டதாக பொலிஸார் கூறினார்.

வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகநபரை மறித்து சோதனை செய்தபோது சந்தேகநபரது சட்டைப்பையினுள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .