2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரதேச சபைக்கு முத்திரை வரி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமான 2010ஆம் ஆண்டுக்குரிய 9.4 மில்லியன் ரூபாய் முத்திரை வரிப்பணம், தற்போது கிடைத்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

வலி.தென்மேற்கு பிரதேச சபைக்குரிய முத்திரை வரி 2010ஆம் ஆண்டிலிருந்து கிடைக்காததனால் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளில் தடங்கலும் தாமதமும் ஏற்பட்டிருந்தன.

இப்பணம் உரிய காலத்தில் கிடைக்காதால் சபைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரதேச சபை செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கியுள்ளதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இப்பணத்தை விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

செயலாளரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், முதற்கட்டமாக 2010ஆம் ஆண்டிற்குரிய முத்திரை வரிப்பணமான 9.4 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து எடுத்து பிரதேச சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

பிரதேச சபையின் கீழுள்ள பகுதிகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவுள்ள இப்பணம், உள்ளுராட்சி அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் ஒரு வருடகால நிலையான வைப்பில் 4 வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .