2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வர், சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தின் தேர்த்திருவிழா, சனிக்கிழமை (12) இடம்பெற்றவேளை, மேற்படி நால்வரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியுள்ளனர். இதனையடுத்து, அவர்களின் பின்னால் பொலிஸார் சென்றிருந்த வேளை, மேற்படி 4 பேரும் சனநெருக்கம் கொண்ட இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, நால்வரையும் பிடித்து விசாரணை செய்த போது, நால்வரும் முன்னுக்கு பின்னான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள்  கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கோணாப்புலம் நலன்புரி முகாம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை (07) உத்தரவிட்டார்.

மேற்படி நபர்கள் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற கரவெட்டியைச் சேர்ந்த நால்வரையும் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அ.க.நடராஜா ஞாயிற்றுக்கிழமை (06) உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். சுன்னாகம் மின்சார சபையினரும் நெல்லியடி பொலிஸாரும் இணைந்து சனிக்கிழமை (06) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

மின்மானிக்குள் ஊசி செருகி மின்மானியின் வேகத்தை குறைத்த குற்றச்சாட்டில் ஒருவரும், திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .